அரசு அபாயகரமான தொழில்களில் பெண்களை பணியமர்த்தக் கூடாது:ஏ.ஐ.டி.யு.சி., தீர்மானம்
பரமக்குடி : பரமக்குடி: அபாயகரமான தொழில்களில் பெண்களை தமிழக அரசு பணியமர்த்தக்கூடாது என்று ஏ.ஐ.டி.யு.சி., கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பரமக்குடியில் ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க கூட்டம் எமனேஸ்வரம் ஜீவா நகர் பேரவை அரங்கத்தில் நடந்தது. நிர்வாகி சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் பெருமாள், சங்க தலைவர் ராதா, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜன் பேசினர். அப்போது தமிழ்நாடு அரசு அபாயகரமான தொழில்களில் பெண்களை பணியமர்த்தக் கூடாது என்ற சட்டத்தை அமல்படுத்த வேண்டும். கைத்தறி மற்றும் துாய்மைப் பணியாளர்கள் உட்பட உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.6000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் ருக்மாங்கதன், கணேசமூர்த்தி, நாகநாதன், லட்சுமி நாராயணன், ரமேஷ் பாபு, சுப்பிரமணியன், தினகரன், முனியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஜீவன் நன்றி கூறினார்.