உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காட்சிப்பொருளான உயர்மின்கோபுரம்

காட்சிப்பொருளான உயர்மின்கோபுரம்

முதுகுளத்துார்: - முதுகுளத்துார் அரசு மருத்துவமனை முன்பு உயர்மின் கோபுரம் பயன்பாடியின்றி இருப்பதால் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது. முதுகுளத்துார் பேரூராட்சி சார்பில் அரசு மருத்துவமனை முன்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோலார் உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டது. அரசு மருத்துவமனை என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடமாக இருப்பதால் உயர்மின் கோபுரம் பயனுள்ளதாக உள்ளது. கடந்த சிலநாட்களாக உயர்மின் கோபுரம் எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் இருளில் மூழ்கியுள்ளது. தற்போது முறையாக மராமத்து பணி செய்யப்படாததால் உயர்மின் கோபுரம் பயன்பாடியின்றி உள்ளது. எனவே காட்சிப்பொருளாக உள்ள உயர்மின் கோபுரத்தை விளக்கு பழுதநீக்கி சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை