உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பராமரிப்பின்றி புதர் மண்டி காணப்படும் கடலாடி அரசு தாலுகா மருத்துவமனை பல ஆண்டுகளாக டாக்டர்கள் பற்றாக்குறை

 பராமரிப்பின்றி புதர் மண்டி காணப்படும் கடலாடி அரசு தாலுகா மருத்துவமனை பல ஆண்டுகளாக டாக்டர்கள் பற்றாக்குறை

கடலாடி: கடலாடி அரசு தாலுகா மருத்துவமனை பல ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பும் இன்றி புதர் மண்டிய கட்டடமாக மாறி வருகிறது. கடந்த 1970ல் கட்டப்பட்ட கடலாடி அரசு தாலுகா மருத்துவமனை தற்போது வரை எவ்வித மராமத்து பணிகளும் இன்றி பொழிவிழந்துள்ளது. புறநோயாளிகள் பிரிவு மற்றும் மருத்துவமனையின் வளாகப் பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்தும் புதர் மண்டியும் காணப்படுகிறது. மருத்துவமனைக்குள் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவே மாறி வருகிறது. கடலாடி அரசு தாலுகா மருத்துவமனைக்கு போதிய டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள், எக்ஸ்ரே பிரிவு, சித்த மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளுக்கு டாக்டர் இல்லாத நிலை பல ஆண்டுகளாகவே உள்ளது. நா.த.க., கடலாடி வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் கூறியதாவது: கடலாடி தாலுகா மருத்துவமனை சுற்றுவட்டார கிராம மக்களுக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். ஆனால் டாக்டர்கள் பற்றாக்குறை பல ஆண்டுகளாக நீடிக்கிறது. மருத்துவமனை வளாகம் குண்டும் குழியுமாக சேதமடைந்த சாலையாக உள்ளது. மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் ரூ.3 கோடியில் புதியதாக கூடுதல் மருத்துவமனை கட்டடம் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. கட்டுமான வசதிகளை ஏற்படுத்தும் நிலையில் டாக்டர்கள் இல்லாததால் அரசு நிதி வீணடிப்பு செய்யப்படுகிறது. மருத்துவமனை வளாகப் பகுதியில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி கடலாடி தாலுகா மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர் மற்றும் செவிலியர் நியமிக்க வேண்டும். நீண்டகால கடலாடி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி