உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தாசில்தாரை மிரட்டியவர் கைது

தாசில்தாரை மிரட்டியவர் கைது

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆண்டாவூரணியில் பட்டியலின வகுப்பினரின் மயானத்தை சேதபடுத்தி ஆக்கிரமித்தோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாலுகா அலுவலகம் முன், தியாகி இமானுவேல் பேரவை சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.இதுகுறித்த சமரசக் கூட்டம் தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. ஆக்கிரமிப்பாளர்கள் மீது எஸ்.பி.பட்டினம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்தனர்.ஆக்கிரமிப்பை அகற்ற பொதுப்பணித் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என அலுவலர்கள் கூறினர். பேச்சு முடிந்து அனைவரும் சென்றனர். அதன்பின், பேரவை கிழக்கு மாவட்ட செயலர் பாகனுார் கணேசன், 40, தாசில்தாரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். கிராம நிர்வாக அலுவலர் நாகேந்திரன் கொடுத்த புகார்படி, போலீசார் கணேசனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ