உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பணி முடித்தும் தொகை வரவில்லை மாவட்ட கவுன்சில் நிதிக்கு காத்திருப்பு

பணி முடித்தும் தொகை வரவில்லை மாவட்ட கவுன்சில் நிதிக்கு காத்திருப்பு

திருப்புல்லாணி : கடந்த 2021 -22 மற்றும் 2022 --23 ஆண்டிற்கான திட்டப் பணிகள் மாவட்ட ஊராட்சி கவுன்சில் நிதியில் செய்யப்பட்டும் இதுவரை தொகை கிடைக்காததால் ஒப்பந்ததாரர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் கேட்டு காத்திருக்கின்றனர். மாவட்ட கவுன்சில் மூலம் பணிகள் செய்த ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது: கடந்த நான்கு ஆண்டுகளாக நிழற்குடை அமைத்தல், பேவர் பிளாக் ரோடு, ஊருணி மராமத்து உள்ளிட்டவைளுக்காக ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பணிகள் செய்துள்ளோம். இதுவரை தொகை விடுவிக்கப்படவில்லை. சொந்த நிதி மற்றும் வட்டிக்கு வாங்கி பணிகள் செய்ததால் தற்போது வரை நிதி கிடைக்காமல் சிரமத்தை சந்தித்து வருகிறோம். கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு சென்று இது குறித்து கேட்டால் மாநில சிறப்பு நிதி வரவில்லை என தொடர்ந்து காரணம் காட்டி அலைக்கழிப்பு செய்கின்றனர். மாவட்டம் முழுவதும் 11 ஒன்றியங்களில் ரூ.22 கோடிக்கும் அதிகமான திட்டப்பணிகள் நடந்துள்ளது. இதற்கான தொகை பெறுவதில் ஒப்பந்ததாரர்கள் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். மாவட்ட கவுன்சில் நிதி எப்போது விடுவிக்கப்படும் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டாலும் உரிய பதில் கிடைக்கவில்லை. எனவே தமிழக அரசு எங்களின் கோரிக்கையை ஏற்று பணிகளுக்கான தொகையை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை