உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மண்டபத்தில் இடியும் நிலையில் நிழற்குடை

மண்டபத்தில் இடியும் நிலையில் நிழற்குடை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் பூங்காவில் இடியும் நிலையில் உள்ள நிழற்குடையால் மக்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. மண்டபம் பேரூராட்சி கடற்கரை பூங்கா பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம் நுழைவு வாயில் அருகில் இந்த நிழற்குடை உள்ளது. பூங்காவில் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், பெரியவர்கள் பொழுது போக்கும் நிழல் தரும் பந்தல், அழகிய கடற்கரை, நடைமேடை உள்ளதால் தினமும் ஏராளமான உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.இப்பூங்கா நுழைவு வாயில் அருகில் உள்ள நிழற்குடையில் மக்கள் காத்திருந்து பஸ்களில் செல்வார்கள். இந்த நிழற்குடை பராமரிப்பின்றி கான்கிரீட் கூரையில் சிமென்ட் பூச்சு இடிந்து விழுந்து கம்பிகள் வெளியில் தெரிகிறது. இதனால் நிழற்குடை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மக்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை அகற்றி புதிய நிழற்குடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை