உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரயில்களின் கால அட்டவணை  சரியாக இல்லாததால் அவதி

ரயில்களின் கால அட்டவணை  சரியாக இல்லாததால் அவதி

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்களின் நேரங்கள் குறித்த கால அட்டவணை சரியாக இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.ராமநாதபுரத்தில் இருந்துதினமும் மதுரைக்கு பாசஞ்சர் ரயில்கள் காலை 6:50, மதியம் 12:00, இரவு 7:00 மணிக்கு இயக்கப்படுகிறது.இதே போல் மதுரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு தினமும் 3 ரயில் சேவை வழங்கப்படுகிறது. திருச்சிக்கும் ரயில் சேவை உள்ளது.இவை தவிர ராமநாதபுரம் வழியாக சென்னைக்கு போர்ட் மெயில், சேது எக்ஸ்பிரஸ், கோவைக்கு வாரம் ஒரு முறையும், வாராந்திர ரயில்களான ஓகா, புவனேஷ்வர், மண்டுவாடிஹ், வாரத்திற்கு 3 நாட்கள் கன்னியாகுமரிக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.இதற்கான ரயில்கள் புறப்படும் நேரம், வந்து சேரும் நேரம், ரயில்களின் எண் போன்ற விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகையில் பல முறை மாற்றங்கள் செய்யப்படுவதால் வெள்ளை தாளில் எழுதி அறிவிப்பு பலகையில் ஒட்டப்படுகிறது.இதனால் முதியவர்கள், கிராமப்புற மக்கள் இந்த எழுத்துக்களை படிக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.ரயில்வே ஸ்டேஷனில் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருவதால் டிஜிட்டல் அறிவிப்பு பலகையும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் ரயில்களின் நேரங்களை கண்டறிவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். ரயில்வே நிர்வாக புதிய கால அட்டவணையை ரயில் நிலையத்தில் அமைக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ