உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முருகப்பெருனுக்கு திருக்கல்யாண விழா

முருகப்பெருனுக்கு திருக்கல்யாண விழா

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடந்தது. இதையடுத்து நேற்று திருக்கல்யாணம் காலை 10:30 மணிக்கு நடந்தது. குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி, வழிவிடு முருகன், பெருவயல் சிவசுப்பிரமணிய சுவாமி என்ற ரெணபலி முருகன் கோயில், வெளிப்பட்டிணம் முருகன் கோயில்களில் அக்.,22 முதல் கந்த சஷ்டி விழா நடக்கிறது. இதன் இறுதி கட்ட நிகழ்வாக வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு நேற்று காலை 10:30 முதல் மதியம் 12:00 மணி வரை திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. வழிவிடு முருகன் கோயில், ரெணபலி முருகன் கோயில்களில் காலை 10:30 க்கு திருக்கல்யாண விழா துவங்கியது. குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் மாலை 6:30 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 8:00 மணிக்கு திருமண கோலத்துடன் வெளி வீதி உலாவும் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை