மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
19 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
19 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
19 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
19 hour(s) ago
ராமேஸ்வரம்:பாக் ஜலசந்தி கடலில் உள்ள கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, 8:00 மணிக்கு சிறப்பு திருப்பலி பூஜை முடிந்து, விழா நிறைவு பெற்றது. விழாவில், 2,000 இலங்கை பக்தர்கள் பங்கேற்றனர்.ஒவ்வொரு ஆண்டும், 3,000 இந்திய பக்தர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து படகில் கச்சத்தீவு விழாவிற்கு செல்வர். தற்போது இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், கச்சத்தீவு விழாவை புறக்கணித்தனர்.ஏற்கனவே, 2019ல் இலங்கை கடற்படை, ராமேஸ்வரம் மீனவர் பிரிட்சோ எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சுட்டுக் கொலை செய்ததை கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு விழாவை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago