உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதுகாப்பு இல்லை இரவுக்காவலர் நியமிக்க கோரிக்கை

அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதுகாப்பு இல்லை இரவுக்காவலர் நியமிக்க கோரிக்கை

திருவாடானை: திருவாடானை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவில் தங்கி பணிபுரியும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதால் இரவுக்காவலர் நியமனம் செய்ய வேண்டும்.திருவாடானையில் அரசு மருத்துவமனை, தொண்டியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், திருவெற்றியூர், மங்களக்குடி, எஸ்.பி.பட்டினம், பாண்டுகுடி, வெள்ளையபுரம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இது தவிர 24 துணை சுகாதார நிலையங்களும் உள்ளன.ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதலுதவி சிகிச்சை, மகப்பேறு கால தடுப்பூசி, குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடக்கிறது. மக்களைத்தேடி மருத்துவம் உள்ளிட்ட அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. காலையில் டாக்டர், நர்ஸ்கள், பணியாளர்கள் பணி செய்கின்றனர். இரவில் ஒரு நர்ஸ், உதவியாளர் என பணியில் உள்ளனர்.திருவாடானை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு காவலர் பணி இல்லாததால் நர்சுகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இதனால் அச்சத்துடன் பயணிபுரியும் நிலை உள்ளது. இரவில் சிகிச்சைக்கு வரும் சிலர் போதையில் வந்து பணியாளர்களுடன் பிரச்னையில் ஈடுபடுகின்றனர்.சிகிச்சையின் போது ஆத்திரத்தில் வரும் சிலர் பணியாளர்கள் மீது கோபத்தை காட்டுகின்றனர். தொண்டியில் சில மாதங்களுக்கு முன்பு போதையில் ஒருவர் தகராறு செய்தார். போலீசில் புகார் செய்யப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதனை தொடர்ந்து தொண்டியில் மட்டும் இரவுக்காவலர் நியமிக்கப்பட்டார். திருவாடானை அரசு மருத்துவமனை மற்ற ஆரம்பசுகாதார நிலையங்களில் இரவுக்காவலர் நியமிக்கவில்லை. எனவே பாதுகாப்பு நலன் கருதி இரவுக்காவலர் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை