தபால் அலுவலகங்களில் ஆக.2ல் பொதுமக்கள் சேவை கிடையாது
ராமநாதபுரம்; ராமநாதபுரம் அஞ்சல் கோட்டத்தில் ஆக.,2ல் புதிய மென்பொருள் மாற்றத்தை முன்னிட்டு தபால் அலுவலகங்களில் பொது மக்கள் சேவை நடைபெறாது. ராமநாதபுரம் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் கூறியிருப்பதாவது: இந்திய தபால்துறையின் ஐ.டி., 2.0 மென் பொருள் மேம்படுத்தப்பட்டு ஆக.,4 முதல் நாடு முழுவதும் அறிமுகப் படுத்தப்பட உள்ளது. இந்த புதிய வசதிகளை கி.யூ., குறியீட்டின் மூலமாக பணம் செலுத்தல் உள்ளிட்ட பல முன்னேற்றமான டிஜிட்டல் சேவைகள் கொண்டு வரப்படுகிறது. இதன் மேம்படுத்தபட்ட மென்பொருள் தடையின்றி செயல்படுத்துவதற்காக பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக ராமநாதபுரம், பரமக்குடி தலைமை அஞ்சலகம், அனைத்து துணை, கிளை அஞ்சலக அலு வலகங்களிலும் ஆக.,2ல் (சனிக்கிழமை) பரிவர்த்தனை இல்லாத நாளாக அறிவிக்கப்படுகிறது. ஆகவே ஆதார் சேவை, தபால் மற்றும் நிதி சார்ந்த தேவைகளை முன் கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். எங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.