உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவாடானை கோயிலுக்கு இரவுக் காவலர் அவசியம்

திருவாடானை கோயிலுக்கு இரவுக் காவலர் அவசியம்

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் இரவுக் காவலர் நியமிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர். திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோயிலில் பிரதோஷம், வைகாசி விசாகம் மற்றும் ஆடிப் பூரத் திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். இரவுக் காவலர் இல்லாததால் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற் பட்டுள்ளது. கோயிலில் ஆங்காங்கே கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இருந்த போதும் இரவுக் காவலர் இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் நள்ளிரவில் நுழைந்த திருடர்கள் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிலைகளை திருடி சென்றனர். போலீசார் சிலைகளை மீட்டனர். எனவே சிலை திருட்டை தடுக்க பாதுகாப்பு அவசியம் என் பதால் இரவுக் காவலர் நியமிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ