வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நாளை நமதே 234 லும் நமதே
கமுதி: அரசை நம்பி இனி பயனில்லை என்ற முடிவால் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சேர்ந்தகோட்டை கிராமத்திற்கு வரும் மழைநீர் வரத்து கால்வாயை சொந்த செலவில் கிராம மக்களே துார்வாரி தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.கமுதி அருகே பேரையூர் ஊராட்சிக்கு உட்பட்ட சேர்ந்தகோட்டையில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. நெல், மிளகாய் உள்ளிட்ட சிறுதானிய பயிர்கள் ஆயிரம் ஏக்கருக்கு அதிகமாக விவசாயம் செய்கின்றனர்.இப்பகுதியில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் பேரையூர் கண்மாயில் இருந்து வரத்து கால்வாய் வழியாக 5 கி.மீ., கடந்து தண்ணீர் வர வேண்டியது உள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள வரத்து கால்வாய் முறையாக பராமரிப்பு பணி செய்யப்படாததால் பக்கவாட்டு சுவர்கள் இல்லாமலும் சீமைக்கருவேல் மரங்கள் வளர்ந்து மணல்மேடாகி உள்ளது.இதனால் பருவமழைக் காலத்தில் தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாகவே மராமத்து பணி செய்யப்படாமல் இருப்பதால் கிராமத்திற்கு தேவையான தண்ணீர் இல்லாமல் மக்கள் விவசாயத்தை கைவிடும் நிலை உருவாகியுள்ளது. அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:சேர்ந்தகோட்டையில் ஏராளமானோர் விவசாயம் செய்கின்றனர். இங்கு வரத்து கால்வாய் முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் விவசாயம் அழிந்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டது. துார்வார வேண்டி பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதையடுத்து கிராம மக்கள் ஒன்று கூடிகிராமத்திற்கு வரும்வரத்து கால்வாயைசொந்த செலவிலே துார்வார முடிவு செய்தனர். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள மக்கள் அனைவரும் கலந்து கொண்டு துார்வாரும் பணியில் ஈடுபட்டனர்.வரும் காலங்களில்விவசாயிகளின் நலன் கருதி அதிகாரிகள் முறையாக வரத்து கால்வாய் துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தேர்தல் புறக்கணிப்பு உட்பட போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
நாளை நமதே 234 லும் நமதே