உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / போலீசுக்கு மிரட்டல்: ஒருவர் கைது

போலீசுக்கு மிரட்டல்: ஒருவர் கைது

திருவாடானை: கோயில் திருவிழாவின் போது டூவீலரில் அதிக இரைச்சலுடன் சென்றவரை தட்டிக் கேட்ட போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.திருவாடானை அருகே கருமொழியில் தர்மமுனிஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. நிகழ்ச்சிக்கு திருவாடானை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டினர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் 26, டூவீலரில் அதிக கரும்புகையை வெளியிட்டும், அதிகமான சத்தத்துடன் பொதுமக்கள் பாதிக்கும் படியாக வேகமாக சென்றார்.அவரை தடுத்து நிறுத்திய ஏட்டுகள் ஆல்பர்ட், சுரேஷ், காவலர் சரவணன் மற்றும் போலீசார் அறிவுரை கூறினர்.ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார் போலீசாரை பார்த்து அசிங்கமாக பேசி டூவீலரை ஏற்றிக் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.திருவாடானை எஸ்.ஐ., சுந்தரமூர்த்தி சென்று சந்தோஷ்குமாரை கைது செய்து டூவீலரை பறிமுதல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ