உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கஞ்சா வைத்திருந்த மூன்று பேர் கைது

கஞ்சா வைத்திருந்த மூன்று பேர் கைது

முதுகுளத்துார் : முதுகுளத்துார்--கீழச்சாக்குளம் சாலையில் முதுகுளத்துார் எஸ்.ஐ., சரவணன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கடம்பன்குளம் ஊருணி அருகே நின்று கொண்டிருந்த​ முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர் செந்துார் பாண்டி மகன் முகேஷ்குமார் 24, வேலு மகன் தனுஷ்கோடி 27, அஞ்சதம்பல் வழிவிட்டான் மகன் பரமசிவம் 25, ஆகிய 3 பேரை சோதனை செய்தனர்.அப்போது 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு வாள் வைத்திருந்தது தெரிய வந்தது. எஸ்.ஐ.,சரவணன் வழக்குபதிந்து முகேஷ்குமார், தனுஷ்கோடி, பரமசிவம் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை