உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிவன் கோயில்களில் இன்று உயிர்களுக்கு படி அருளிய லீலை

சிவன் கோயில்களில் இன்று உயிர்களுக்கு படி அருளிய லீலை

பரமக்குடி; -பரமக்குடியில் உள்ள சிவன் கோயில்களில் இன்று அனைத்து ஜீவ ராசிகளுக்கும் படி அருளிய லீலை நடக்கிறது.பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயில், நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில் ஆகிய அனைத்து கோயில்களிலும் இன்று அதிகாலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது.தொடர்ந்து சுவாமி, அம்பாள் காலை 9:00 மணிக்கு தனித்தனி தேரில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வலம் வருவர். அப்பொழுது அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அருளிய லீலையாக பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி