மேலும் செய்திகள்
தொடர் விடுமுறையால் படகு குழாமில் மக்கள் கூட்டம்
01-Apr-2025
ராமேஸ்வரம்:மன்னார் வளைகுடா கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் சுற்றுலா படகு சவாரிக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து 1.5 கி.மீ., ல் மன்னார் வளைகுடா கடலில் உள்ள குருசடை தீவுக்கு வனத்துறையின் சுற்றுலா படகு சவாரி மையம் உள்ளது. இதில் 8 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ. 300 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நேற்று மணிக்கு 30 முதல் 40 கி. மீ., வேகத்தில் மன்னார் வளைகுடா கடலில் காற்று வீசியது. இதனால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டதால் காலை முதல் சுற்றுலா படகுகளை இயக்க வனத்துறை தடை விதித்தது. சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.அதன் பின் இரு படகையும் குருசடை தீவு கடற்கரையில் பாதுகாப்பாக வனத்துறையினர் நிறுத்தி வைத்தனர்.
01-Apr-2025