உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்படும் டிராக்டர்கள் 

கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்படும் டிராக்டர்கள் 

திருவாடானை; திருவாடானை பகுதியில் உழவுப் பணிகள் துவங்கிய நிலையில் நான்கு கூட்டுறவு சங்கங்களில் வாடகைக்கு விட டிராக்டர்கள் இருப்பதால் விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என அலுவலர்கள் தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திகழ்கிறது. ஆடியில் விவசாயிகள் விதைக்க துவங்கி விடுவார்கள். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் நிலங்கள் ஈரப்பதமாக உள்ளது.இதை பயன்படுத்தி விவசாயிகள் முதல் கட்ட உழவில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து கூட்டுறவு சங்க அலுவலர்கள் கூறியதாவது:கூட்டுறவு சங்கங்களுக்கு வருவாய் கிடைப்பதுடன், விவசாயிகளுக்கும் குறைந்த கட்டணத்தில் சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உழவு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்களில் 33 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் சிறுகம்பையூர், என்.மங்கலம், எட்டுகுடி, அரசூர் ஆகிய கூட்டுறவு சங்கங்களில் டிராக்டர் வாங்கி விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது. இவற்றை வாடகைக்கு எடுக்க கூட்டுறவு இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். உழவு தொழில் துவங்கியுள்ளதால் விவசாயிகள் டிராக்டரை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை