இன்று முதல் ராமேஸ்வரத்தில் ரயில் பெட்டி பராமரிப்பு பணி
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் இன்று (ஜன.,31) முதல் திருப்பதி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிக்காக வந்து செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலம் திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக சென்னை, திருப்பதி, கன்னியாகுமரி, கோவை, மதுரை, திருச்சி மற்றும் வெளி மாநிலங்களுக்கு மண்டபம், ராமநாதபுரத்தில் இருந்து ரயில்கள் இயக்கப்படுகிறது.இதில் திருப்பதி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை முன்பு ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் குடிநீர் நிரப்பி, கழிப்பறை சுத்தம் செய்து பராமரித்தனர். பாம்பன் பாலம் கட்டுமானப் பணியால் பராமரிப்புக்கு இரு ரயில்களும் மதுரை கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில் ஜன.,17 முதல் பராமரிப்புக்கு திருப்பதி, கன்னியாகுமரி ரயில் பெட்டிகள் ராமேஸ்வரம் வரும் என தெற்கு ரயில்வே அறிவித்த நிலையில் திடீரென ரத்து செய்தது.இந்நிலையில் இன்று முதல் திருப்பதி, கன்னியாகுமரி ரயில் பெட்டிகள் ராமேஸ்வரத்தில் பராமரிப்பு செய்யப்பட்டு மீண்டும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.