உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பயிற்சி முகாம் நிறைவு

பயிற்சி முகாம் நிறைவு

கீழக்கரை; கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் கழிவு மேலாண்மையில் புதுமைகள், செயல்படுத்துதல் தலைப்பில் ஆறு நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது. நிறைவு விழாவிற்கு முதல்வர் சேக் தாவூத் தலைமை வகித்தார். இயந்திரவியல் துறை விரிவுரையாளர் சோமசுந்தரம் வரவேற்றார். பயிற்சி முகாமின் இணை ஒருங்கிணைப்பாளர் செந்தில் ராஜன் பயிற்சி முகாமின் அறிக்கையை சமர்ப்பித்தார். சிறப்பு விருந்தினராக முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் நிர்மல் கண்ணன் பேசினார். இயந்திரவியல் துறை விரிவுரையாளர் அருண் சக்கரவர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !