உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஓட்டுச்சாவடி நிலை அலுவலருக்கு பயிற்சி 

ஓட்டுச்சாவடி நிலை அலுவலருக்கு பயிற்சி 

திருவாடானை: தமிழகத்தில் 2026ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தீவிர திருத்த பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி சட்டசபை தொகுதி வாரியாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. திருவாடானை சட்டசபை தொகுதிக்கான பயிற்சி நேற்று திருவாடானையில் உள்ள தனியார் மகாலில் நடந்தது. திருவாடானை தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் காசி தலைமை வகித்தார். உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆண்டி, ராமமூர்த்தி மற்றும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு திருத்தப் பணிகளை மேற்கொள்வது குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை