| ADDED : பிப் 12, 2024 04:40 AM
திருப்புல்லாணி: -திருப்புல்லாணி அருகே ஐந்திணை மரபணு பூங்காவில் மாவட்டத்தில் நாற்றங்கால் பண்ணை நடத்திவரும் மகளிர் சுய உதவி குழுவினருக்கு தொழில்நுட்ப மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்தது.தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில் 11 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 500 மகளிர் சுய உதவி குழுவினருக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குனர் செய்யது சுலைமான் மற்றும் தோட்டக்கலை துறை துணை இயக்குனர்(பொ) குமார், உதவி திட்ட அலுவலர் அழகப்பன், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கமலி, காவியா ஆகியோர் மரக்கன்று, நாற்றங்கால் வளர்ப்புமுறை குறித்து பயிற்சி அளித்தனர். பூங்காவில் வளர்க்கக்கூடிய மரக்கன்றுகளையும், மிளகாய் நாற்றுகளையும் பெண்கள் பார்வையிட்டு சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.