உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரோட்டில் மரம் முறிந்து போக்குவரத்து பாதிப்பு

ரோட்டில் மரம் முறிந்து போக்குவரத்து பாதிப்பு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் - பரமக்குடி ரோடு கீழத்துாவல் அருகே பலத்த காற்றுக்கு ரோட்டோரத்தில் இருந்த புளியமரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.முதுகுளத்துாரில் இருந்து வெண்ணீர்வாய்க்கால், விளங்குளத்துார், கீழத்துாவல், கீழக்கன்னிச்சேரி வழியாக பரமக்குடி செல்லும் ரோடு உள்ளது. இங்கு ரோட்டின் இருபுறங்களிலும் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஏராளமான மரங்கள் வைக்கப்பட்டுள்ளது. தற்போது முதுகுளத்துார் பகுதியில் நேற்று காலை முதல் பலத்த காற்று வீசியது. கீழத்துாவல் அருகே ரோட்டோரத்தில் இருந்த புளியமரம் முறிந்து விழுந்தது. முதுகுளத்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் மாடசாமி தலைமையில் வீரர்கள் மரக் கிளையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் முதுகுளத்துார் பரமக்குடி ரோட்டில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பரமக்குடியில் இருந்து முதுகுளத்துார் நோக்கி வந்த பஸ் மகிண்டி, சூரங்குளம் வழியாக முதுகுளத்துாருக்கு மாற்று வழியில் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை