உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சூறாவளியால் கடல் கொந்தளிப்பு பாம்பனில் மரங்கள் சாய்ந்தன

சூறாவளியால் கடல் கொந்தளிப்பு பாம்பனில் மரங்கள் சாய்ந்தன

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் பகுதியில் சூறாவளியால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டதால் பாம்பன் கடலோரத்தில் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன.வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் ராட்சத அலைகள் எழுந்து கடற்கரையில் ஆக்ரோஷமாக மோதியது.இதன் காரணமாக பாம்பன் லைட் ஹவுஸ் கடற்கரையில் உள்ள மீனவர் குடிசை வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது. மேலும் கடலோரத்தில் உள்ள 5 தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த மரங்கள் கடல் அரிப்பில் இருந்து வீடுகளை பாதுகாத்த நிலையில் தற்போது முறிந்து விழுந்ததால் வீடுகள் சேதமடையும் அபாயம் உள்ளது என பாம்பன் மீனவர்கள் அச்சம் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி