/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் கடலில் கொந்தளிப்பு; மீனவர் வீடுகளுக்குள் நீர் புகுந்தது
ராமேஸ்வரம் கடலில் கொந்தளிப்பு; மீனவர் வீடுகளுக்குள் நீர் புகுந்தது
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் பகுதியில் வீசிய சூறாவளியால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதில் பாம்பனில் மீனவர் குடிசை வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது.வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் நேற்று காலை முதல் மேக மூட்டத்துடன் ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி பகுதியில் சூறாவளி வீசியது. கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன.பாம்பன் தெற்குவாடி கடலோரத்தில் உள்ள மீனவர்களின் குடிசை வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் மீனவர்கள் வெளியேறி உறவினர்கள் வீட்டில் தஞ்சமடைந்தனர்.மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர். இதனால் 1500 விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டன.