உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்திய மஞ்சள், ஏலக்காய் சிக்கியது: 2 பேர் கைது

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்திய மஞ்சள், ஏலக்காய் சிக்கியது: 2 பேர் கைது

ராமநாதபுரம் : தமிழகத்திலிருந்து இலங்கைக்கு சமையல் மஞ்சள், ஏலக்காய் கடத்தி வரப்படுவதாக இலங்கை கடற்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து கல்பிட்டியா பகுதியில் உள்ள கீரமுண்டலமா, தோராயடி கடற்கரைப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கீரமுண்டலமா பகுதியில் நடந்த சோதனையில் 8 மூடைகளில் இருந்த 240 கிலோ ஏலக்காய் பறிமுதல் செய்யப்பட்டது. தோராயடி கடற்கரைப்பகுதியில் நடந்த சோதனையில் 40 மூடைகளில் இருந்த சமையல் மஞ்சள் 1.23 டன், 3 மூடைகளில் இருந்த 102 கிலோ ஏலக்காய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் தொடர்புடைய கல்பிட்டியா அருகேயுள்ள ஆனவசாலா பகுதியை சேர்ந்த டாயஸ், ஆயாஸ் ஆகியோரை கைது செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.50 லட்சம், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.-------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ