கூவர்கூட்டத்தில் ஒரே நாளில் இரண்டு படங்கள் ஷுட்டிங்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கூவர்கூட்டத்தில் தனுஷ் நடிக்கும் 'இட்லி கடை' திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு, பெயர் வைக்கப்படாத மற்றொரு படத்தின் சூட்டிங் என ஒரே நாளில் இரண்டு படங் களின் சூட்டிங் நடந்தது. முதுகுளத்துார், தேனி உள்ளிட்ட பகுதிகளில் தனுஷ், -நித்யா மேனன் நடிப்பில் 'இட்லி கடை' என்ற திரைப்பட சூட்டிங் நடைபெற்றது. முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரகனி, அருண் விஜய் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்தனர். தற்போது இட்லி கடை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முதுகுளத்துார் அருகே கூவர்கூட்டத்தில் நடந்தது. இதேபோன்று வேல்ஸ் தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ்ராஜா இயக்கத்தில் பெயர் வைக்கப்படாத திரைப்படத்தின் படப் பிடிப்பு கூவர்கூட்டத்தில் நடந்தது. கூவர்கூட்டத்தில் ஒரே நாளில் இரண்டு படங்களின் சூட்டிங் நடந்த நிலையில் கூவர்கூட்டம் கிராமம் சூட்டிங் ஸ்பாட்டாக மாறி வருகிறது.