மேலும் செய்திகள்
இருவருக்கு 'குண்டாஸ்'
02-Dec-2024
ராமநாதபுரம் : மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட இருவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்கில் கீழக்கரையில் இஸ்மத் இன்னுான் 37, ராமநாதபுரத்தில் மணிகண்டன் 34, ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசாரால் வழக்கு பதிவுசெய்து சிறையில் உள்ளனர். இவர்கள் தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதால் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சந்தீஷ் பரிந்துரை செய்தார். கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரும் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
02-Dec-2024