உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டூவீலர் திருடியவர் கைது 

டூவீலர் திருடியவர் கைது 

தொண்டி, : தொண்டியை சேர்ந்தவர் செய்யது இப்ராகிம் 51. நேற்று காலை எஸ்.பி.பட்டினம் பள்ளிவாசல் முன்பு டூவீலரை நிறுத்தியிருந்தார். அந்த டூவீலரை ஒருவர் திருடிச் சென்ற போது அருகில் இருந்தவர்கள் விரட்டிச் சென்று பிடித்து எஸ்.பி.பட்டினம் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே மருதவயல் கிராமத்தை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் 44, என தெரிந்தது. சென்னையில் வசிக்கும் இவர் அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து சாலை ஓரங்களில் நிற்கும் டூவீலர்களை திருடி விற்று விட்டு சென்னைக்கு சென்று விடுவது வழக்கம். இவர் மீது 10க்கும் மேற்பட்ட டூவீலர் திருட்டு வழக்குகள் உள்ளன. எஸ்.பி.பட்டினம் போலீசார் நவநீதகிருஷ்ணனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ