உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரை, பரமக்குடியில் டைப்ரைட்டிங் தேர்வுகள்

கீழக்கரை, பரமக்குடியில் டைப்ரைட்டிங் தேர்வுகள்

கீழக்கரை: அரசு டைப்ரைட்டிங் தேர்வுகள் பிப்.24, 25ம் தேதிகளில் ராமநாதபுரம் மையம் சார்பில் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியிலும், பரமக்குடி மையம் சார்பில் முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லுாரியிலும் நடக்கிறது.ராமநாதபுரம் மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்க நிர்வாகிகளான சரவணபவா, முருகபூபதி, குஞ்சரமூர்த்தி ஆகியோர் கூறியதாவது:டைப்ரைட்டிங் தேர்வுகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடப்பிரிவில் சனிக்கிழமை இளநிலை மூன்று தொகுதிகளாகவும், முதுநிலை இரண்டு தொகுதிகளாகவும், ஞாயிற்றுக்கிழமை இளநிலை இரண்டு தொகுதிகளாகவும், முதுநிலை இரண்டு தொகுதிகளாகவும் மற்றும் உயர் வேக தேர்வுகள் இரண்டு தொகுதிகளாகவும் நடக்க உள்ளது.மாவட்டத்தில் 5,000 பேர் கலந்து கொள்ள உள்ளனர். இத்தேர்வுகளில் பங்குபெறும் மாணவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பயிலகத்தில் 6 மாத காலம் பயிற்சி பெற்றுள்ளனர். தட்டச்சு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வுக்கு குறைவான கட் ஆப் மதிப்பெண்கள் எடுத்தாலே அரசு வேலைக்கு தகுதி பெறுகிறார்கள்.ராமநாதபுரம் மையத்தில் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் ேஷக் தாவூது, முதன்மை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை