ராமேஸ்வரத்தில் பாதாள சாக்கடை: இயக்குநர் ஆய்வு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் சிவராசு ஆய்வு செய்தார்.ராமேஸ்வரம் நகராட்சியில் ரூ.52.60 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் 2019ல் துவங்கியது. நகராட்சியில் 21 வார்டுகளில் 13 வார்டுகளில் இத்திட்டத்தை செயல்படுத்தி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரோட்டில் பள்ளம் தோண்டி குழாய் பதித்து விரைவில் பணிகள் முடிய உள்ளது. இதில் கழிவுநீர் சேகரிப்பு பணிகள், கழிவு நீர் சுத்திகரிருப்பு நிலைய பணிகள் முடிந்துள்ள நிலையில் நேற்று ராமேஸ்வரம் வந்த நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் சிவராசு பாதாள சாக்கடை திட்ட பணிகள் மற்றும் நகராட்சியில் வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கும் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.நகராட்சிகள் நிர்வாகஇணை கமிஷனர் ேஷக்அப்துல் ரகுமான், ராமேஸ்வரம் நகராட்சி கமிஷனர் கண்ணன் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.