பரமக்குடியில் பராமரிக்கப்படாத பூங்கா: சீரமைக்க வலியுறுத்தல்
பரமக்குடி: பரமக்குடி ஆற்றுப்பாலம் அருகில் உள்ள நகராட்சி சுதந்திர தின பூங்கா பராமரிக்கப்படாமல் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. அவற்றை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். பரமக்குடி ஆற்றுப்பாலம் அருகில் நகராட்சி சுதந்திர தின பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு நடைமேடையுடன் கழிப்பறை வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் உடைந்து வீணாகி உள்ளது. மேலும் கழிப்பறையில் தண்ணீர் இன்றி பயன்படுத்த முடியாத சூழல் இருக்கிறது. இதனால் பரமக்குடியில் சிறுவர்கள் பொழுது போக்க இடம் இன்றி மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பூங்காக்களை சீரமைப்பதுடன், புதிய பூங்காக்களை நிறுவ நகராட்சி முன்வர வேண்டும்.