உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மயான பகுதியில் தேங்கும் குப்பையால் சுகாதாரக்கேடு

மயான பகுதியில் தேங்கும் குப்பையால் சுகாதாரக்கேடு

கடலாடி; கடலாடி ஊராட்சிக்கு உட்பட்ட மயானம் அருகே பல மாதங்களாக அள்ளப்படாத குப்பையால் சுகாதாரக்கேடு நிலவுகிறது.கடலாடி அரசு கலைக்கல்லுாரி மற்றும் கூட்டுறவு விற்பனை பண்டகசாலை கோடவுன் செல்லும் ரோட்டோரம் மயானப் பகுதி அமைந்துள்ளது. இதன் அருகே மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிப்பதற்கான திடக்கழிவு மேலாண்மை கூடம் செயல்பாடின்றி உள்ளது.பண்டிகைக் காலங்களில் குவிந்துள்ள குப்பையை இப்பகுதியில் வழி நெடுகிலும் கொட்டியுள்ளதால் சமீபத்தில் பெய்த மழையால் கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது.கடலாடி ஊராட்சி நிர்வாகத்தினர் மக்காத பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து அப்பகுதியை துாய்மைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை