மேலக்கொடுமலுார் கண்மாய்ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்
ராமநாதபுரம்: முதுகுளத்துார் மேலக்கொடுமலுார் கிராம விவ சாயிகள் பெரிய கண்மாய் வரத்து கால்வாய் ஆக்கிர மிப்பை அகற்ற வலி யுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இதில், மேலுக்கொடுமலுார் பெரிய கண்மாய் பாசனத்தில் 500 ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. இந்நிலையில் மேற்கு கால்வாய் பல ஆண்டு களுக்கு பிறகு துார்வாரப் பட்டுள்ளது. சிலர் கால்வாயின் கரைப் பகுதியை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். மேலும் நீர்வரத்து பாதையை தடுத்து வருகின்றனர். எனவே பொதுப்பணித்துறை (நீர்வளம்) அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.