உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பேரூராட்சியில் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்

பேரூராட்சியில் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்

தொண்டி: தொண்டி பேரூராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் நாள் தோறும் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை பெறுகின்றனர். ஆனால் பேரூராட்சிகளில் இத்திட்டம் செயல்பாட்டில் இல்லை. கிராமங்களின் கட்டமைப்புடன் கூடிய பேரூராட்சிகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தொண்டி பேரூராட்சி மக்கள் கூறியதாவது:தொண்டி பேரூராட்சியில் விவசாய நிலங்களும், அதை சார்ந்த விவசாய தொழிலாளர்களும் அதிகளவில் உள்ளனர். இத்தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. பெருமானேந்தல், எம்.ஆர்.பட்டினம், பி.வி.பட்டினம், காந்திநகர், சின்னத்தொண்டி, வேலங்குடி, வடவயல், காமராஜ்நகர் உள்ளிட்ட 15 வார்டுகள் உள்ளன.எனவே அரசு அறிவித்த 100 நாள் வேலை திட்டத்தை தொண்டி பேரூராட்சியில் செயல்படுத்தினால் இப்பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பல ஆயிரம் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ