இணைப்பு சாலைகளில் எச்சரிக்கை பலகை அமைக்க வலியுறுத்தல்
ஆர்.எஸ்.மங்கலம் : தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் இணைப்பு சாலைகளில் விபத்தை தடுக்க எச்சரிக்கை பலகைகள், வேகதடுப்பு கள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.திருச்சி -ராமேஸ்வரம், தேசிய நெடுஞ்சாலை திருவாடானை கைகாட்டி பகுதி முதல் தேவிபட்டினம் வரை, தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் அதிகப்படியான இணைப்பு சாலைகள் உள்ளன. கிராமப் பகுதியில் இருந்து வரும் பொதுமக்கள் இந்த இணைப்பு சாலைகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இணைப்பு சாலைகள் குறித்து தெரியாததன் காரணமாக, திடீரென குறுக்கிடும் வாகனங்களால் விபத்து ஏற்படுகின்றன.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இணைப்பு சாலைகளில் வேக தடுப்புகள், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் இணைப்பு சாலைகள் உள்ளதை அறிந்து கொள்ளும் வகையில், எச்சரிக்கை பலகைகளை அமைக்க வேண்டும்.