உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சேதமடைந்த கட்டடத்தில் வி.ஏ.ஓ., அலுவலகம்

சேதமடைந்த கட்டடத்தில் வி.ஏ.ஓ., அலுவலகம்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் தாலுகா அலுவலகம் முன்பு உள்ள கீழமுதுகுளத்துார் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் சேதமடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.முதுகுளத்தூர் வடக்கு, தெற்கு, கீழத்துாவல், மேலக்கொடுமலுார், காக்கூர், தேரிருவேலி ஆகிய 6வருவாய் கிராமங்களில் 35க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் பணிபுரிகின்றனர். தாலுகா அலுவலகம் முன்பு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடத்தில் கீழ, மேல முதுகுளத்துார் வி.ஏ.ஓ., அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலக கட்டடம் சிலமாதங்களுக்கு முன்பு வர்ணம் பூசப்பட்டது. தற்போது கட்டடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. இதனால் வி.ஏ.ஓ., மக்கள் விபத்து அச்சத்தில் வந்துசெல்கின்றனர். எனவே அதிகாரிகள் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி