உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வீரமாகாளியம்மன் கும்பாபிஷேகம்

வீரமாகாளியம்மன் கும்பாபிஷேகம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கீழச்சாக்குளம் கிராமத்தில் வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு கணபதி ஹோமம் துவங்கி விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, தனபூஜை, முதல் கால யாக பூஜைகள், மூல மந்திரங்கள் பூர்ணாஹூதி நடந்தது.நேற்று காலை 6:00 மணிக்கு கோபூஜை, லட்சுமி பூஜை,சப்த கன்னிபூஜை, இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, கலச புறப்பாட்டிற்கு பிறகு கும்ப நீர் ஊற்றப்பட்டது. பின்பு வீரமாகாளியம்மனுக்கு பால், மஞ்சள், சந்தனம், திரவியப் பொடி உட்பட 21 வகை அபிஷேகம், தீபாரதனை நடந்தது.கிராம மக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முதுகுளத்துார் சுற்றியுள்ள கிராமத்தினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை