உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆவணி முகூர்த்தம் காய்கறி விலை உயர்வு 

ஆவணி முகூர்த்தம் காய்கறி விலை உயர்வு 

திருவாடானை : ஆவணி மாதம் முகூர்த்தம் என்பதால் மார்க்கெட்டில் அனைத்து வகையான காய்கறி விலையும் உயர்ந்துள்ளது. திருவாடானை, தொண்டி பகுதியில் ஆதியூர், கிளியூர் உள்ளிட்ட பல கிராமங்களில் கத்தரிக்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய், முருங்கைக்காய் போன்ற காய்கறி வகைகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இக்காய்கறிகள் மார்க்கெட்டிற்கு வந்து விற்பனை செய்யப்படும். இது தவிர தக்காளி, பீன்ஸ், வெண்டைக்காய், முள்ளங்கி உள்ளிட்ட காய் கறிகள் வெளி மாவட்டங் களிலிருந்து சரக்கு வாகனத்தில் விற்பனை செய்யப்படும். கடந்த ஆடி மாதம் காய்கறிகள் விலை குறைந்திருந்த நிலையில், ஆவணி மாதம் நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு, காதணி விழா, கிரகப்பிரவேசம் உட்பட முகூர்த்தம் அதிகம் என்பதால் காய்கறிகள் தேவை அதிகரித்துள்ளது. இதனால் கிலோ ரூ.20க்கு விற்ற கத்தரிக்காய் தற்போது ரூ.50க்கும், ரூ.20க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.40க்கும், ரூ.20க்கு விற்ற தக்காளி ரூ.30 என அனைத்து வகையான காய்கறி விலையும் அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ