உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஹைட்ரோ கார்பன் திட்ட அனுமதியை எதிர்த்து செப்.18, 19ல் வாகன பிரசாரம்

ஹைட்ரோ கார்பன் திட்ட அனுமதியை எதிர்த்து செப்.18, 19ல் வாகன பிரசாரம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி செப்.18, 19ல் வாகனப்பிரசாரம் செய்யப்படும், என ஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்ப்பு நடவடிக்கை குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்ப்பு நடவடிக்கை குழு கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் பெரிய கண்மாய் பாசன சங்கத் தலைவர் பாலசுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். காவிரி-வைகை- கிருதுமால்-குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் அர்ச்சுணன், திட்ட எதிர்ப்பு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் மலைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். இத்திட்டத்தின் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த செப் 18, 19 ஆகிய தேதிகளில் ஆனந்துார் முதல் கடலாடி வரை 20 கிணறுகள் தோண்டும் இடங்களை இணைத்து வாகனப்பிரசாரம் செய்யப்படும். காந்தி ஜெயந்தி அன்று(அக்.2) நடக்கும் கிராம சபை கூட்டத்தில் ராமநாதபுரத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்படும். நவ.,ல் கோரிக்கை மாநாடும், டிசம்பரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முழு அடைப்பு பந்த் நடத்துவது என முடிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் தாலுகா செயலாளர் செபஸ்தியான் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை