உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நடப்பதற்கு லாயக்கற்ற ரோட்டில் வாகனங்கள் பழுது: மக்கள் சிரமம்

நடப்பதற்கு லாயக்கற்ற ரோட்டில் வாகனங்கள் பழுது: மக்கள் சிரமம்

முதுகுளத்துார்: -முதுகுளத்துார் அருகே ஆனைசேரியில் இருந்து நல்லாங்குளம் செல்லும் ரோட்டில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளதால் வாகனங்கள் பழுதாகிறது. நடப்பதற்கு லாயக்கற்ற ரோட்டில் மக்கள் சிரமப்படுகின்றனர்.நல்லாங்குளம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு ஆனைசேரியில் இருந்து நல்லாங்குளம் கிராமத்திற்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தார்ரோடு அமைக்கப்பட்டது. பிறகு முறையாக பராமரிப்பு பணி செய்யப்படாததால் ரோடு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாகி உள்ளது. நடப்பதற்கு மக்கள் சிரமபடுகின்றனர்.இதனால் சுற்றிச்செல்லும் அவலநிலை உள்ளது. முதுகுளத்துார் செல்வதற்காக டூவீலர், ஆட்டோவில் செல்வதால் வாகனங்கள் பழுது ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சேதமடைந்த ரோட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை