மேலும் செய்திகள்
டிச.30 பறிமுதல் வாகனங்கள் ஏலம்
24-Dec-2024
ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் மது விலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச., 30ல் ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்படவுள்ளது. ராமநாதபுரம் மது விலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 84 வாகனங்கள் ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் டிச., 30 காலை 10:00 மணிக்கு பொது ஏலம் விடப்படவுள்ளது. பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பி1 போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டு இன்று(டிச.,28) முன் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யும் வாகனத்திற்கு முன் பணம் செலுத்த வேண்டும். ஏலத்தில் எடுக்கப்படும் வாகனங்களின் தொகைக்கு அரசின் ஜி.எஸ்.டி., வரி தனியாக விதிக்கப்படும், என மதுவிலக்கு போலீசார் தெரிவித்துள்ளனர். விபரங்களுக்கு இன்ஸ்பெக்டர்: 96777 32179, எஸ்.ஐ., 83000 38162, எழுத்தர்: 84389 39372 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
24-Dec-2024