| ADDED : பிப் 16, 2024 05:08 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் மாநில சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதபோராட்டம் நடந்தது.மாநிலப்பொருளாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில தலைவர் முத்தையா, செயலாளர் சுதாகர், மாவட்டத் தலைவர் வெள்ளத்துரை, செயலாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தனர்.இதில் 2017-18 ல் பதவி உயர்வு வழங்காததை கண்டித்தும், நடப்பு 2023-24ல் 10ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் கிராம உதவியாளர்கள் அனைவருக்கும் வி.ஏ.ஓ., பதவி உயர்வு வழங்காமல் இரு பணியிடங்களுக்கு ஒன்று வழங்கியதை கண்டித்தும்காலை 10:00 முதல் மாலை 5:45 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடந்தது. ஏராளமான கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர்.*திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் தென்னவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.