மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
19 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
19 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
19 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
19 hour(s) ago
பெருநாழி : தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில மையம் சார்பில் 18 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கோரி சென்னையில் பிப்.2ல் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடக்க உள்ளது.இப்போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊராட்சி செயலாளர், சுகாதாரம் மற்றும் துாய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளனர். பெருநாழியைச் சேர்ந்த ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி செயலர்கள் சங்கச் செயலாளர் முருகன் மற்றும் மாநில இணை செயலாளர் கமுதி ஜெயபாரதன் ஆகியோர் கூறியதாவது:ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம், ஓய்வூதியம் மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கவும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டியபடி காலமுறை ஊதியம் வழங்க கோரியும், ஊராட்சி செயலர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வு நிலை, சிறப்பு நிலை, தேக்க நிலை ஊதியம் வழங்க கோரினர்.மேலும் ஊராட்சி செயலாளர்களுக்கு அரசுப் பணியாளருக்கு பொருந்தும் விடுப்பு விதிகள் மற்றும் அனைத்து சலுகைகளும் வழங்க கேட்டல் உள்ளிட்ட 18 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 500 பணியாளர்களை அழைத்துச் செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட ஒன்றியங்களில் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது என்றனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago