உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் பைபர் படகில் விதிமீறல்: மீன்துறை எச்சரிக்கை

ராமேஸ்வரத்தில் பைபர் படகில் விதிமீறல்: மீன்துறை எச்சரிக்கை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், பாம்பனில் பைபர் கிளாஸ் படகில் அதிக குதிரை திறன் இன்ஜின் பொருத்தினால் பறிமுதல் செய்யப்படும் என மீன்துறையினர் எச்சரித்தனர்.ராமேஸ்வரம் பாம்பன் தனுஷ்கோடியில் 300 மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் பைபர் கிளாஸ் படகுகள் உள்ளது. இதில் நாட்டுப்படகிற்கு 24 குதிரை திறன் கொண்ட இன்ஜினும், பைபர் கிளாஸ் படகில் லம்பாடி இன்ஜின் பொருத்திக் கொள்ள மீன்துறை அனுமதித்துள்ளது. ஆனால் சில பைபர் கிளாஸ் படகில் லம்பாடி இன்ஜினை விட அதிக குதிரை திறன் கொண்ட இன்ஜினை பொருத்தியுள்ளனர். இந்த இன்ஜின் மூலம் ராமேஸ்வரம், பாம்பனில் இருந்து இலங்கைக்கு 2 மணி நேரத்தில் செல்ல முடியும். இதனால் மீனவர்கள் போர்வையில் கடத்தல்காரர்கள், பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதால் இதற்கு மீன்துறை தடை விதித்துள்ளது.ஆனால் இதனை பொருட்படுத்தாமல் மீனவர்கள் பல படகில் விதிமீறிய இன்ஜின் பொருத்தி உள்ளதால் சட்டவிரோத செயல்கள் தடையின்றி நடக்கிறது. இதனால் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என உளவுத்துறை எச்சரித்தது. இதையடுத்து பைபர் படகில் விதிமீறி இன்ஜின் பொருத்தி இருந்தால் பறிமுதல் செய்யப்படும். ஜூன் 6ல் நாட்டுப்படகுகள் ஆய்வு செய்யப்படும் என ராமேஸ்வரம் மீன்துறை உதவி இயக்குநர் தமிழ்மாறன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை