உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாக்காளர் விழிப்புணர்வு  மனித சங்கிலி 

வாக்காளர் விழிப்புணர்வு  மனித சங்கிலி 

ராமநாதபுரம்: வாக்காளர்கள் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் ராமநாதபுரத்தில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மனித சங்கிலி நடந்தது.ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடந்த மனிதசங்கிலியை மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு துவக்கி வைத்தார். 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், அனைத்து மக்களும் வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மனித சங்கிலி நடந்தது. இதில் 16பள்ளிகளை சேர்ந்த 3000 மாணவர்கள் பங்கேற்றனர். ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., கோபு, ராமநாதபுரம் தாசில்தார் ஸ்ரீதரன் மாணிக்கம், தேர்தல் பிரிவு தாசில்தார் முருகேசன், தனித்துணைதாசில்தார் வேங்கடகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ