மேலும் செய்திகள்
குருபூஜை விழா
30-Dec-2024
உத்தரகோசமங்கை : - உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயில் ஊருணி கரையோரம் குடிமகன்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பக்தர்கள் அச்சமடைகின்றனர்.வராகி அம்மன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்கள் வருகின்றனர். 6 ஏக்கரில் உள்ள உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயில் சீதை புனல் ஊருணி கரையோரம் காலை முதல் இரவு வரை குடிமகன்கள் மது அருந்தும் கூடாரமாக மாற்றி வருகின்றனர்.பக்தர்கள் கூறியதாவது:உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலுக்கு மேற்கு பகுதி மற்றும் வடக்கு, தெற்கு பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் ஆள் நடமாட்டமில்லாத இடங்களை தேர்வு செய்து மது அருந்தும் போக்கு தொடர்கிறது. அப்பகுதியில் மது அருந்திவிட்டு பிளாஸ்டிக் பொருள்களை கரையோரம் வீசி செல்லும் அவலம் ஏற்படுகிறது.எனவே உத்தரகோசமங்கை போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். குடிமகன்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
30-Dec-2024