உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பு

வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பு

பரமக்குடி: பரமக்குடி வைகை ஆற்றில் கலக்கும் கழிவு நீரால் கள்ளிக்கோட்டையில் உள்ள நகராட்சி நீரூற்றுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பரமக்குடி வைகை ஆற்றின் கரையில் உருவாகிய நகராகும். இங்கு நெசவாளர்கள் சாயத் தொழிலுக்கு உகந்த நீர் கிடைத்ததால் குடியேறினர். இதேபோல் பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கு வைகை பாசனம் பிரதானமாக உள்ளது. முக்கியமாக குடிநீர் ஆதாரமாக விளங்கும் வைகையில் நீர் உறிஞ்சும் கிணறுகள், ஆழ்குழாய் என நகராட்சி மற்றும் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டு மக்களுக்கான தண்ணீர் விநியோகம் வைக்கப்படுகிறது. இந்நிலையில் பரமக்குடி நகராட்சி காட்டுப்பரமக்குடி தொடங்கி காக்காதோப்பு வரை வைகை ஆற்றின் இரு கரைகளிலும் கழிவுநீர் குட்டைகள் உருவெடுத்துள்ளது. மேலும் காக்காதோப்பு உரப்புளி ஊராட்சி பகுதியில் கடந்த சில நாட் களாக கழிவு நீர் உடைந்து ஆறு முழு வதும் பரவி வருகிறது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளிக்கோட்டை வைகை ஆற்றில் ஏராளமான நீர் உறிஞ்சும் கிணறுகள் மூலம் மக்களுக்கான குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தொடர்ந்து கழிவுநீர் மாதக்கணக்கில் செல்லும் நிலையில் ஊற்று நீர் மாசடைந்து குடிக்க முடியாத நிலை உண்டாகும். தொற்றுக்கு வழிவகுக்கும் கழிவு நீர் வைகையில் கலக்கும் சூழ்நிலை தடுத்திட, நகராட்சி, ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ