உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நீர்நிலை ஆக்கிரமிப்பு வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

நீர்நிலை ஆக்கிரமிப்பு வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:திருவாடானை அருகே மாவிலங்கை கிராமத்தில் உள்ள ஊருணியில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அகற்றக்கோரி கலெக்டர், திருவாடானை தாசில்தாருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு: மனுவில் குறிப்பிட்டுள்ள சர்வே எண்ணில் வருவாய்த்துறை ஆவணங்கள்படி மாவிலங்கை ஊருணி என உள்ளது. அளவீடு செய்யப்படும். ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் அகற்றப்படும் என அரசு தரப்பு உத்தரவாதம் அளித்தது. அதை பதிவு செய்கிறோம். சட்ட நடைமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். அளவீடு செய்யும் போது அனைத்து ஆக்கிரமிப்பாளர்களுக்கும் நோட்டீஸ் அளிக்க வேண்டும். இதை 5 மாதங்களில் முடிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி