உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொடர் மழையால் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் நீர்மட்டம் உயர்வு

தொடர் மழையால் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் நீர்மட்டம் உயர்வு

ஆர்.எஸ்.மங்கலம், : சில நாட்களாக பருவ மழை அதிகரித்துள்ளதால் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் நீர்மட்டம் ஒரு அடி வரை உயர்ந்துள்ளது.தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய், நாரை பறக்க முடியாத 48 குருச்சிகளைக் (கிராமங்களை) கொண்ட கண்மாய் என்ற சிறப்பு பெயர் பெற்றது ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய். இக்கண்மாயில் முழு கொள்ளளவின் போது தேக்கப்படும் 1205 மில்லியன் கன அடி தண்ணீரால் 12 ஆயிரத்து 142 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன.கடந்த சில ஆண்டுகளாக குறைவான பருவமழை மற்றும் முழுமையாக வைகை அணை நீர் திறக்கப்படாதது உள்ளிட்ட காரணங்களால் கண்மாய் முழு கொள்ளளவு நீரை எட்டுவதில் தொடர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழைக்கு கண்மாயில் தண்ணீரின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது கண்மாயில் 23 சதவீதம் மழை நீர் தேங்கி உள்ளது. பாசன விவசாயிகளின் கணக்கெடுப்பின்படி கண்மாய் மொத்த நீர்மட்டமான 6.5 அடி கொள்ளளவில் ஒரு அடிக்கும் குறைவான தண்ணீர் தேங்கியுள்ளது. கண்மாயில் கூடுதல் தண்ணீர் தேங்குவதற்கு தொடர்ந்து பருவமழையை விவசாயிகள் எதிர்நோக்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி